

அருள்மிகு ஸ்ரீ பெரிய அங்காள ஈஸ்வரி திருக்கோயலில் தேனி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில் ஐந்நூறு வருடங்களுக்கு முன் (அப்போதைய மதுரையில்) நிறுவப்பட்டது. ஆரம்பகாலத்தில் பெட்டி வடிவில் நிறுவப்பட்டு பின் பங்காளிகளின் ஒற்றுமையாலும் பங்களிப்பினாலும் அம்மாவின் அனுமதியும் ஆசீர்வாதத்தையும் பெற்று உருவமாக நிறுவப்பட்டுள்ளது.
ஆயிரம் தலைக்கட்டுகளுக்கு மேலுள்ள இத்திருக்கோவில் பங்காளிகளால் வருடம் ஒருமுறை மஹாசிவராத்திரி அன்று குச்சனூரில் உள்ள முல்லையாற்றிலிருந்து தீர்த்தம் கலசங்களில் சுமந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. வருடம் ஒருமுறை பங்காளிகள் மாலையணிந்து விரதமிருந்து பாதயாத்திரையாக மஹாசிவராத்திரிக்கு ஆலயம் அடைவார்கள். பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை மஹா கும்பாபிஷேகமும் பத்துவருடங்களுக்கு ஒருமுறை பெரிய கும்பிடும் பங்காளிகளால் நடத்தப்படும். அனைத்து அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
